என்னைக் காக்கும் கேடகமே

Ennai Kaakum Kedagame

Fr S J Berchmans

Writer/Singer

Fr S J Berchmans

என்னைக் காக்கும் கேடகமே
தலையை நிமிரச் செய்பவரே
இன்று உமக்கு ஆராதனை
என்றும் உமக்கே ஆராதனை

உம்மை நோக்கி நான் கூப்பிட்டேன்
எனக்கு பதில் நீர் தந்தீரய்யா
படுத்து உறங்கி விழித்தெழுவேன்
நீரே என்னைத் தாங்குகிறீர்

ஆராதனை ஆராதனை
அப்பா அப்பா உங்களுக்குத்தான்

சூழ்ந்து எதிர்க்கும் பகைவருக்கு
அஞ்சமாட்டேன் அஞ்சவே மாட்டேன்
விடுதலை தரும் தெய்வம் நீரே
வெற்றிப் பாதையில் நடத்துகிறீர்

பக்தியுள்ள அடியார்களை
உமக்கென்று நீர் பிரித்தெடுத்தீர்
வேண்டும்போது செவிசாய்க்கின்றீர்
என்பதை நான் அறிந்து கொண்டேன்

உலகப் பொருள் தரும் மகிழ்வை விட
மேலான மகிழ்ச்சி எனக்கு தந்தீர்
நீர் ஒருவரே பாதுகாத்து
சுகமாய் வாழச் செய்கின்றீர்

உமது அன்பில் மகிழ்ந்திருப்பேன்
உம்மோடுதான் நான் வாழ்ந்திடுவேன்
எனக்கு நன்மை செய்தபடியால்
நன்றிப் பாடல் பாடிடுவேன்

Ennaik kaakkum kaedakamae
thalaiyai nimirach seypavarae
intu umakku aaraathanai
entum umakkae aaraathanai

ummai Nnokki naan kooppittaen
enakku pathil neer thantheerayyaa
paduththu urangi viliththeluvaen
neerae ennaith thaangukireer

aaraathanai aaraathanai
appaa appaa ungalukkuththaan

soolnthu ethirkkum pakaivarukku
anjamaattaen anjavae maattaen
viduthalai tharum theyvam neerae
vettip paathaiyil nadaththukireer

pakthiyulla atiyaarkalai
umakkentu neer piriththeduththeer
vaenndumpothu sevisaaykkinteer
enpathai naan arinthu konntaen

ulakap porul tharum makilvai vida
maelaana makilchchi enakku thantheer
neer oruvarae paathukaaththu
sukamaay vaalach seykinteer

umathu anpil makilnthiruppaen
ummoduthaan naan vaalnthiduvaen
enakku nanmai seythapatiyaal
nantip paadal paadiduvaen