ஆசீர்வதிக்கும் கரத்தில் ஆணி அடிக்க கண்டேன்.
அன்பு செய்த மனதை காயம் செய்ய கண்டேன்.
கோரமான முகத்தில் பாரம் ஒன்றை கண்டேன்.
அன்பு செய்த நண்பன் துரோகம் செய்ய கண்டேன்.
ரத்தத்தின் பெருந்துழி, முட்களால் வரும்வலி,
ரோமரின் தடியடி தாங்கினீரே எனக்காய்.
ரட்சிப்பின் பாத்திரம் என் கையில் கொடுத்திட
மரணத்தின் பாத்திரத்தை ஏந்தினீரே
உங்க பாசம், நேசம், தயவை நான் மறக்கவில்லையே.
உம்மை போல என்னை நேசிக்க யாருமில்லையே.
இந்த அன்பிற்காக எதையும் செய்வேன் மரிக்கும் வரையிலே.
கன்னத்தில் அறைந்தனர், முகத்தில் உமிழ்ந்தனர்,
நிர்வாணமாக்கி உம்மை கேலி செய்தனர்.
உம் அன்பின் ஆழமும் அடிமையின் கோலமும்
அறிந்த என் ஆத்துமா உருகி நின்றதே.
உம் இறுதி சொட்டு ரத்தம் எனக்காய் சிந்தினீரே.
அன்பாய் மீண்டும் என்னை தூக்கி எடுத்த கிருபை பெரிதே.
இந்த அன்பை விட யாவும் சிறிதே உலக வாழ்விலே.