பாடு பாடு - சௌண்டு பட்டணத்த அசைக்கணும்.
போடு போடு - லைக்கு பட்டனெல்லாம் தெறிக்கனும்.
ஹே வாட்சாப்புல வாழ்த்துக்கல கூறுவோமே
டுவிட்டருல ட்விட்டுக்கல போடுவோமே !
தாறுமாறா ஆரவாரம் செய்வோமே
தாழ்மையோடு ஆராதனை செய்வோமே !
மனதார ஏசுவை கொண்டாடுவோம்.
தார தப்பெல்லாம் கிழிந்து போகுதே
நான் பண்ண தப்புகூட கழிந்து போனதே.
ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே
ஜீவன் தந்தவரை போற்றி பாடுவோம்.
அழுத்திக் கொண்டிருந்த பாவ பாரங்களை எல்லாம்
கொளுத்தி எரியவிட்ட இயேசு இரத்தமே.
பாதாளமே இப்போ அதிருதம்மா…
பூலோகமே இப்போ மகிழுதம்மா…
ஆராதனை எல்லாம் இனிக்குதம்மா…
தானா என் மனம் துதிக்குதம்மா...
பாத மாறிப்போன ஆடு எங்கள
கூகுள் மேப் ஒன்னும் கண்டு பிடிக்கல
ஆத்துமாவின் பாவ நோய்களை
ஆன்டிவைரஸால அழிக்க முடியல.
சல்லி காசுக்கும் தகுதி இல்லாத என்ன
தேடி வந்தாரே வெள்ளி காசாக.
பாதாளமே இப்போ அதிருதம்மா…
பூலோகமே இப்போ மகிழுதம்மா…
ஆராதனை எல்லாம் இனிக்குதம்மா…
தானா என் மனம் துதிக்குதம்மா...