கழுகு போல காத்திருந்து
புது பெலன் அடைவேன்
கர்த்தருக்கு காத்திருந்து
உயர எழும்பிடுவேன்
நடந்தாலும் சோர்வடைவதில்லை
ஓடினாலும் இளைப்படைவதில்லை
உந்தன் சமூகக் காற்று
என்னை உயர உயர உயர எழுப்பிடுமே
அல்லேலூயா அல்லேலுயா
உயர எழும்பிடுவேன்
கர்த்தர் உமக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டு போவதில்லை
நீதிமானின் கால்களை நீர்
தள்ளாட விடுவதில்லை
கர்த்தர் உம்மை தேடுவோர்க்கு
குறைவே இருப்பதில்லை
இஸ்ரவேலை காக்கும் தேவன்
நீர் உறங்கிப்போவதில்லை
கர்த்தர் உரைத்த வார்த்தை
ஒன்றும் தவறிப் போவதில்லை
நீதிமானின் வாக்குத்தத்தம்
தரையில் விழுவதில்லை