காப்பார் உன்னைக் காப்பார்

Kappar Unnai Kappar

Dr. D.G.S Dhinakaran

Writer/Singer

Dr. D.G.S Dhinakaran

காப்பார் உன்னைக் காப்பார்
காத்தவர் காப்பார்
இன்னும் இனிமேலும் காத்திடுவார்
கலங்காதே மனமே காத்திடுவார்

கண்டுன்னை அழைத்தவர் கரமதைப்பார்
உன்னைக் கைவிடாதிருப்பார்
ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த
ஆசிகளை எண்ணிப்பார்
எண்ணிப்பார் எண்ணிப்பார் எண்ணிப்பார்
என்றும் அதை எண்ணிப்பார்

இஸ்ரவேலுக்கு வாக்குப்படி
இன்பக் கானான் அளிக்கவில்லையோ
இப்போது இவர்களை நிர்மூலம்
செய்வதென்றும் பின்னும்
இரங்கவில்லையோ
இல்லையோ, இல்லையோ, இல்லையோ
மனஸ்தாபம் கொள்ளவில்லையோ

வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும்
இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும்
சிற்சில வேளையில்
சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும்
ஜெயமும், கனமும், சுகமும்
உனக்கென்றும் அளிப்பவரே