குற்றம் நீங்கக் கழுவினீரே
சுற்றி வருவேன் உம்மையே
பற்றிக் கொண்டேன் உம் வசனம்
வெற்றி மேல் வெற்றி காண்பேன்
நீர்தானே யேகோவா ராஃபா
சுகமானேன் கல்வாரி காயங்களால்
இரக்கம் கண்முன்னே
உம் வாக்கு என் நாவில் -உம்
நான் ஏன் கலங்கணும்
நன்றி கூறுவேன்
மகிமை மேகத்திற்குள்
மறைந்து நான் வாழ்கின்றேன் -உம்
இரட்சகர் இயேசுதான்
எப்போதும் என் முன்னே
உம்மையே நம்பியுள்ளேன்
உம்மோடுதான் நடப்பேன்
தடுமாற்றம் எனக்கில்லை
தள்ளாடுவதுமில்லை
உமது ஜனத்தின் மேல்
பிரியும் வைக்கின்றீர்
நீடிய ஆயுளால்
திருப்தியாக்குவீர்
உருமாற்றம் அடைகிறேன்
உம் மேக நிழலிலே
மனம் புதிதாகின்றது
மறுரூபம் ஆகின்றேன்