மாறிடும் எல்லாம் மாறிடும்
என் இயேசுவாலே எல்லாம் மாறிடும்
Verse 1
அவர் ஆடையைத் தொட்ட மாத்திரத்தில்
பெரும்பாடு நீங்கிற்றே
ஆதியும் அந்தமுமானவராலே
அந்தகாரம் நீங்கிற்றே
கட்டுகள் உடைந்ததே
கவலைகள் நீங்கிற்றே
மாறிடும் எல்லாம் மாறிடும்
என் இயேசுவாலே எல்லாம் மாறிடும்
Verse 2
இரையாதே என்று சொன்னாரே திரைகடல் அடங்கிற்றே
அமைதலாயிறு என்றாரே அலைகளும் ஓய்ந்ததே
பயங்கள் பறந்ததே
நம்பிக்கை பிறந்ததே
மாறிடும் எல்லாம் மாறிடும்
என் இயேசுவாலே எல்லாம் மாறிடும்
Verse 3
லாசருவே நீ எழுந்து வா என்று சொன்னாரே
மரித்த லாசரு கல்லறை விட்டு எழுந்து வந்தானே
அழுகுரல் நின்றதே
ஆனந்தம் வந்ததே
மாறுதே எல்லாம் மாறுதே
என் இயேசுவாலே எல்லாம் மாறுதே
மாறுதே கஷ்டம் மாறுதே
என் இயேசுவாலே கஷ்டம் மாறுதே
மாறுதே கடன் மாறுதே
என் இயேசுவாலே கடன் மாறுதே
மாறுதே வறுமை மாறுதே
என் இயேசுவாலே வறுமை மாறுதே
மாறுதே வியாதி மாறுதே
என் இயேசுவாலே வியாதி மாறுதே
மாறிற்றே எல்லாம் மாறிற்றே
என் இயேசுவாலே எல்லாம் மாறிற்றே