நீர் சொன்னால் போதும் செய்வேன்

Neer Sonnal Pothum

Gersson Edinbaro

Writer/Singer

Gersson Edinbaro

நீர் சொன்னால் போதும் செய்வேன்
நீர் காட்டும் வழியில் நடப்பேன்
உம் பாதம் ஒன்றே பிடிப்பேன்
என் அன்பு இயேசுவே x 2

ஆராதனை இயேசுவுக்கே
ஆராதனை இயேசுவுக்கே x 2

நீர் சொன்னால் போதும் செய்வேன்
நீர் காட்டும் வழியில் நடப்பேன்
உம் பாதம் ஒன்றே பிடிப்பேன்
என் அன்பு இயேசுவே x 2

கடலின் மீது நடந்திட்ட
உம் அற்புத பாதங்கள்
எனக்கு முன்னே செல்வதால் எனக்கில்லை கவலை
காற்றையும் கடலையும் அதட்டிய
உம் அற்புத வார்த்தைகள்
எந்தன் துணையாய் நிற்பதால் எனக்கேது கவலை

பாதை எல்லாம் அந்தகாரம்
சூழ்ந்து கொண்டாலும்
பாதைக் காட்ட நேசருண்டு பயமே இல்லையே
பார்வோன் சேனை தொடர்ந்து
வந்து சூழ்ந்து கொண்டாலும்
பாதுகாக்க கர்த்தர் உண்டு பயமே இல்லையே

ஆராதனை இயேசுவுக்கே
ஆராதனை இயேசுவுக்கே x 2

நீர் சொன்னால் போதும் செய்வேன்
நீர் காட்டும் வழியில் நடப்பேன்
உம் பாதம் ஒன்றே பிடிப்பேன்
என் அன்பு இயேசுவே x 2