தொட்டு சுகமாக்குமையா இயேசுவே

Thottu Sugam

Gersson Edinbaro

Writer/Singer

Gersson Edinbaro

தொட்டு சுகமாக்குமையா இயேசுவே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே
மாறுமே எல்லாம் மாறுமே x 2

தொட்டு சுகமாக்குமையா இயேசுவே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே
Verse 1

எட்டிக்காய் போல் கசக்கும் எந்தன் வாழ்க்கையை
உம் பாசக் கைகள் எட்டி இன்று தொடணுமே x 2
கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதம்
கர்த்தா எந்தன் கதறல் கேளும் x 2

தொடணுமே என்னை தொடணுமே x 2

தொட்டு சுகமாக்குமையா இயேசுவே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே
Verse 2

கடனும் உடனும் என்னை முடக்க முடியாதே
கடல் மேல் நடந்த கர்த்தர் என்னோடிருக்கின்றார் x 2
கடல் மேல் என்னை நடக்கச் செய்வார்
கடனை எல்லாம் மாறச் செய்வார் x 2

மாறுமே எல்லாம் மாறுமே x 2

தொட்டு சுகமாக்குமையா இயேசுவே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே
Verse 3

குறைவை எண்ணி புலம்புவதை நிறுத்துவேன்
நிறைவாய் என்னை நடத்துபவர் இருப்பதால் x 2
இல்லை என்பது எனக்கு இல்லை
தொல்லை என்பது துளியும் இல்லை
இல்லையே தொல்லை இல்லையே x 2

தொட்டு சுகமாக்குமையா இயேசுவே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே

தொடணுமே என்னை தொடணுமே
தொடணுமே என்னை தொடணுமே