எங்கே சுமந்து போகீறீர்?
சிலுவையை நீர் எந்கே சுமந்து போகிறீர்
பொங்கும் பகைவராலே, அங்கம் நடு நடுங்க
எங்கே போகிறீர்
1. மனித பாவத்தாலே, மரணத்தீர்வை பெற்று
தூய செம்மறிபோலே, துக்கத்துடன் வருந்தி
எங்கே போகிறீர்
2. பாரச்சிலுவை மரம், பாவத்தின் சுமை தாங்கி
பாசத்துடன் அனணத்து, பாரத்துடன் நடந்து
எங்கே போகிறீர்
3. கல்வாரி மலை நாடி, தள்ளாடி தரை வீழ்ந்து
எல்லோரின் பாவங்களை, தனிமையால் சுமந்து
எங்கே போகின்றீர்
4. மாமரி கன்னி அன்னை, மகனின் கோலங் கண்டு
மாதுயருடன் வாடி, மனம் நொந்து வருந்த
எங்கே போகிறீர்
5. உதிரம் ஆறாய் சிந்தி, உள்ள உரமிழந்து
சீரேன் சீமோன் துணையை, ஏற்று வழி நடந்து
எங்கே போகிறீர்
6. கர்த்தரே உம் வதனம், இரத்தக் கறையால் மங்கி
உத்தமி வெராணிக்கம்மாள், வெண் துகிலால் துடைத்தும்
எங்கே போகிறீர்
7. பாவங்கள் ஒன்றாய் சேர்ந்த, பாரச் சுமையினாலே
மீண்டும் தரையில் வீழ்ந்தும் வீரத்துடன் எழுந்து
எங்கே போகிறீர்
8. புண்ணிய ஸ்தீரிகள் பலர், புலம்பி அழும் வேளை
ஆறுதல் கூறி நீரும், நேசக்கண்ணீர் சொரிந்து
எங்கே போகிறீர்
9. சிலுவை பாரத்தாலே, மாமரி ஏகமைந்தன்
மூன்றாம் முறை தரையில், முகம் படிந்தெழுந்தும்
எங்கே போகிறீர்
10. நீடாடை கழற்றவே, கோடாகோடிக் காயங்கள்
இரத்தம் ஆறாய் பெருகி, வேதனையால் வருந்தி
எங்கே போகிறீர்
11. நீட்டிய கால் கரத்தில், நீண்ட இரும்பாணிகள்
நிஷ்ட யூதர் அறைந்தும், நேசத்திலே வெந்து
பலி-யாகினீர்
12. சிலுவை பீடமேறி, மும்மணி நேரந் தொங்கி
அரிய பிதாவை வேண்டி, ஆருயிர் ஒப்படைத்து
பலி-யாகினீர்
13. மரி தாய் மடிமீதில், மரித்த மகன் தாங்கி
ஏழு சோக வாட்களால், ஊடுருவி வருந்தி
தாயே நின்றீர்
14. கர்த்தரின் உடல்தனை, கல்லறைக்குள் அடக்கி
உத்தானம் ஜீவனுமாய், உயிருடன் எழுந்து
எப்போ வருவீர்