தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்

Devareer Neer Sagalamum Seiya Vallavar

Unknown

Writer/Singer

Unknown

தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்
தேவனே உமக்கொப்பான தேவன் யார்

நீர் செய்ய நினைத்தது நிறைவேறும்
நீர் செய்வதைத் தடுப்பவன் யார் - தேவரீர்

1. தரிசனம் தந்தவர் நீர் அல்லவோ
தவறாமல் நிறைவேற்றி முடிப்பீரே
சவால்கள் என்றும் ஜெயித்திடுவேன்
சர்வ வல்லவர் நீர் தானே
- தேவரீர் நீர்

2. தடைகளை உடைப்பவர் நீர் தானே
தடுப்பவர் எவரும் இங்கில்லையே
கடலையும் ஆற்றையும் கடந்திடுவேன்
கன்மலையே உம்மை துதித்திடுவேன்
- தேவரீர் நீர்