அறியாததும் எட்டாததுமான
பெரிய காரியம் செய்திட்டார்
எண்ண முடியாததும்
நான் நினையாததுமான
பெரிய காரியம் செய்திட்டார்
என் தேவனால்
எல்லா நன்மை கிடைத்திடுதே
என் தேவனால்
நல்ல மேன்மை கிடைத்திடுதே
என் தேவனால்
பரிபூரணமடைந்திட்டேனே
கிருபையால் நான்
என்றும் ஜெயித்திடுவேன் - 2
சிங்கத்தின் வாயை கிழிக்கின்ற
வரம் தந்தார்
சத்துரு கோட்டையை தகர்க்கின்ற
ஞானம் தந்தார் - 2
என் தேவனால்
நான் சேனைக்குள் பாய்வேன்
என் தேவனால் நான் வென்றிடுவேன் - 2
கிருபையால் நான் தாண்டிடுவேன்
கிருபையால் நான் வென்றிடுவேன்
அவர் கிருபையால் நான் தாண்டிடுவேன்
அவர் கிருபையால் நான் வென்றிடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா - 2
ராஜாவின் பிள்ளையாய்
என்னை அவர் மாற்றினார்
தேவனின் ராஜ்ஜியத்தை
எனக்குள்ளே அவர் வைத்திட்டார் - 2
நித்திய ஜீவனை இரத்தத்தால் தந்தாரே
நீதிமானாய் என்னை மாற்றினாரே - 2
அவர் கிருபையால் நான் மீட்பு பெற்றேன்
அவர் கிருபையால் நான் நீதி பெற்றேன் - 2
அல்லேலூயா அல்லேலூயா - 2
தேவையெல்லாம் அவர் நிறைவாக சந்தித்தார்
ஐஸ்வர்யம் எல்லாம் எனக்காக வைத்திட்டார் - 2
பாலைவனம் கூட சோலையாய் மாறீற்றே
பொன்னின் மேல் நடக்கின்ற வாழ்வை தந்தார்
அவர் கிருபையால் நான் வாழ்வு பெற்றேன்
அவர் கிருபையால் நான் மேன்மை பெற்றேன் - 2
அல்லேலூயா அல்லேலூயா - 2
- அறியாததும்