அருள்நாதர் இயேசுகிறிஸ்துவின் அளவற்ற அன்பினால் பரிசுத்த ஆவியரின் அருளால் துவங்கப்பட்ட திருச்சபை தாம்பா தமிழ் திருச்சபை. தமிழ் கிறிஸ்தவ பண்பாட்டை தமிழ் ஆராதனை வாயிலாகவும் ஐக்கிய கூட்டுறவு தமிழ் கூடுகைகள் வழியாகவும் பிரதிபலிப்பதுவே முக்கிய ஆன்மீக நோக்கம் தனி நபர் விசுவாசத்தில் வளரவும் தமிழ் தலைமுறையினர் வாழும் பண்பாட்டுடன் சொந்த மண்ணின் பண்பாட்டுச் சுவையை அறிந்திடவும் வழிச்செல்லவே தாம்பா தமிழ் திருச்சபை தோன்றியது.
தமிழ் பாடல்கள் தமிழ் இறைச்செய்தி தடம் பிரளாத நற்கருணை அன்பின் ஐக்கிய கூடுகைகள் இவைகளே ஊழியத்தின் முக்கிய அம்சங்கள் ஆகும்.தாம்பா தமிழ் திருச்சபையின் Founders திருவாளர்கள் டேவிட் டானியல், ஜேக்கப் ஜார்ஜ் ஜெபதாஸ் , பிரிட்டோ K. பால்ராஜ் ,பாபு முனிசாமி, கேன்டர்சன் ஏசுதாஸ் , Rev.Dr. பிரின்ஸ் ஆகும்.
தாம்பா பூகோளத்தில் சில கிறிஸ்தவ ஐக்கிய கூடுகைகள் மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே நடந்த சூழலில் அந்த கூடுகைகளுக்கு schedule conflict வராமல் அந்த ஊழியங்களுக்கும் இடையூறு வந்து விடக்கூடாது என்ற நல்ல நோக்கத்தோடு இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுகிழமைகளில் மட்டும் ஆராதனை என்று தோன்றிய முதல் தமிழ் திருச்சபையே தாம்பா திருச்சபை.அருட்பணிக்கு என்று ஆண்டவரால் அழைக்கப்பட்டு பயிற்சி பெற்று திருச்சபைகளால்அங்கிகாரம் பெற்று திருச்சபை பணிக்கென்று அருட்பொழிவும் பெற்று முழு நேர சுவிசேஷப்பணிக்கு திருப்பணி செய்தல் மட்டுமே திருமுறை காட்டும் ஆயர் பணி ஆகும். தாம்பா தமிழ் திருச்சபை தோன்ற இறைவன் பயன்படுத்தியவரும் தாம்பா தமிழ் திருச்சபையின் முதல் போதகருமான அருள் திரு. பிரின்ஸ் வேதமாணிக்கம் அவர்களுக்காக ஜெபியுங்கள்.
தாம்பா திருச்சபையை இன்றைய சூழலில் வழி நடத்திச் செல்லும் ஜாண்சன், பிரேவிலி ,பிரேம் குமார், ஜெபதாஸ் கரன் ஆகியோரையும் மற்றும் Board of Director. தாம்பா தமிழ் திருச்சபை ஆகியோரையும் ஜெபத்தில் நினைவுகூறுவோம்.திருச்சபை திருப்பணியில் தளைத்து ஓங்கி வளர தீவிரமாய் திருப்பணியில் இணைந்திட உங்கள் ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.