என் மேல் நினைவானவர்
எனக்கெல்லாம் தருபவர்
என் பக்கம் இருப்பவர்
இம்மானுவேல் அவர் - 2
1.என் மேல் கண் வைத்தவர்
கண் மணி போல் காப்பவர்
கை விடாமல் அணைப்பவர்
இம்மானுவேல் அவர் - 2
- என்மேல்
2.ஆலோசனை தருபவர்
அற்புதங்கள் செய்பவர்
அடைக்கலமானவர்
இம்மானுவேல் அவர் - 2
- என்மேல்
3.சுகம் பெலன் தருபவர்
சோராமல் காப்பவர்
சொன்னதை செய்பவர்
இம்மானுவேல் அவர் - 2
- என்மேல்
என் இயேசுவே என் இயேசுவே
என் இயேசுவே
இம்மானுவேல் நீரே - 2