Song Profile

எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரே

Davidsam Joyson

Tamil

Alternate Title

Enthan Thazhvil Enai

Other Names

Enthan Thaazhvil Enthan Thaazvil Ennai

About

எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரே உந்தன் நாமம் உயர்த்திடுவேன் எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே நன்றியால் துதித்திடுவேன் -எந்தன் தாழ்வில் கடந்த நாட்களில் கண்ணின் மணி போல் கருத்துடன் நீர் காத்தீரே கடந்து வந்த பாதையில் தினமும் கரம் பிடித்தீர் அதிசயமாய் இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன் -எந்தன் தாழ்வில் கழுகை போல் உம் சிறகின் மேலே சுமந்து என்னை தாங்கினீரே வழிகளில் நான் இடறி விழாமல் கருணை கரத்தால் உயர்த்தினீரே இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன் -எந்தன் தாழ்வில் உலகம் என்னை கைவிட்ட போது கிருபையால் என்னை தாங்கினீரே மனிதர் யாவரும் மறந்திட்ட போது மறவாமல் என்னை நினைத்தவரே இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன் -எந்தன் தாழ்வில்