சிலுவை நிழலதிலே
காண்பேன் இளைப்பாறுதல்
வானத்திலும் பூவிலும்
இயேசு நாமம் அடைக்கலமே - 2
- சிலுவை நிழலதிலே
1.மான்கள் நீரோடைகளை
தினம் வாஞ்சித்து கதறிடும் போல் - 2
கர்த்தாவே என் உள்ளமும்
உம்மில் சேர்ந்திட வாஞ்சிக்குதே - 2
- சிலுவை நிழலதிலே
2.உலகோர் பகைத்திட்டாலும்
என்னை உற்றார் வெறுத்திட்டாலும் - 2
நிந்தைகள் சுமந்திட
எனக்கென்றும் கிருபை தாரும் - 2
- சிலுவை நிழலதிலே
3.வியாதி படுக்கையிலும்
மனம் வாடித்தவிக்கையிலும் - 2
கர்த்தாவே உம் கிருபை
என்னை நித்தமும் தாங்கிடுமே-2
- சிலுவை நிழலதிலே
4.எப்போ நீர் வந்திடுவீர்
எந்தன் கண்ணீர் துடைத்திடுவீர் - 2
மண்ணில் பரதேசி நான்
வேகம் வந்தென்னை சேர்த்துக்கொள்ளும் - 2
சிலுவை நிழலதிலே
காண்பேன் இளைப்பாறுதல்
வானத்திலும் பூவிலும்
இயேசு நாமம் அடைக்கலமே - 2
சிலுவை நிழலதிலே