உம்மைத்தான் நம்பியிருக்கிறோம்
உம்மையன்றி
யாரும் இல்லையப்பா - 2
அற்புதம் செய்யுங்கப்பா
எங்க வாழ்க்கையிலே
உம்மை தான் நம்பியிருக்கோம்
இயேசப்பா - 2
- உம்மைதான்
1. நீங்கதான் எதாவது செய்யணும்
என்று எதிர்ப்பார்த்து
காத்திருக்கிறோம் - 2
நீர் சொன்ன வார்த்தையை
பிடித்துக்கொண்டு - 2
உங்க முகத்தையே
நோக்கி இருக்கிறோம் - 2
- அற்புதம்
2. நிந்தையும் அவமானமும்
சகித்துக் கொண்டு
உம் செட்டை நிழலிலே
வந்து நிற்கிறோம் - 2
நிச்சயமாய் செய்வீர்
என்ற நம்பிக்கையில் - 2
உங்க கரத்தை நோக்கி
இருக்கிறோம் - 2
- அற்புதம்