Song Profile

இவரே பெருமான்

Dr. D.G.S Dhinakaran

Tamil

Alternate Title

Ivare Peruman

About

பல்லவி இவரே பெருமான், மற்றப் பேர் அலவே பூமான் – இவரே பெருமான் சரணங்கள் 1. கவலைக் கிடங்கொடுத் தறியார் – வேறு பவவினை யாதுமே தெரியார் – இப் புவனமீது நமக்குரியார் – இவரே 2. குருடர்களுக் குதவும் விழியாம் – பவக் கரும இருளை நீக்கும் ஒளியாம் – தெய்வம் இருக்குந் தலஞ்சல் வாசல் வழியாம் – இவரே 3. பலபிணி தீர்க்கும் பரிகாரி – சொல்லும் வலமையில் மிக்க விபகாரி – எக் குலத்துக்கும் நல்ல உபகாரி – இவரே 4. அறஞ் செய்வதினில் ஒரு சித்தன் – கொடு மறம்விடு பவர்க்கருள் முத்தன் – இங்கே இறந்தோர்க் குயிரீயும் கர்த்தன் – இவரே 5. அலகை தனை ஜெயித்த வீரன் – பவ உலகை ரட்சித்த எழிற்பேரன் – விண் ணுலகு வாழ் தேவ குமாரன் – இவரே 6. பொன்னுலகத் தனில்வாழ் யோகன் – அருள் துன்ன உலகில் நன்மைத் தேகன் – நம்பால் தன்னை யளித்த ஓர் தியாகன் – இவரே