Song Profile

தேவனுக்கே மகிமை

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Devanuke Magimai

About

தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை ஐயா வாழ்க வாழ்க உம்நாமம் வாழ்க 1. உன்னத்தில் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் – இந்தப் பூமியிலே சமாதானமும் பிரியமும் உண்டாகட்டும் – ஐயா 2. செவிகளை நீர் திறந்து விட்டீர் செய்வோம் உம் சித்தம் – இந்தப் புவிதனில் உம் விருப்பம் பூரணமாகட்டும் – ஐயா 3. எளிமையான எங்களையே என்றும் நினைப்பவரே – எங்கள் ஒளிமயமே துணையாளரே உள்ளத்தின் ஆறுதலே – ஐயா 4. தேடுகிற அனைவருமே மகிழ்ந்து களிகூரட்டும் – இன்று பாடுகிற யாவருமே பரிசுத்தம் ஆகட்டுமே – ஐயா 5. குறை நீக்கும் வல்லவரே கோடி ஸ்தோத்திரமே – பாவக் கறைபோக்கும் கர்த்தாவே கல்வாரி நாயகனே – ஐயா