Song Profile

எங்கள் போராயுதங்கள்

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Engal Poraauythangal

Other Names

Engal Poraauythangal

About

எங்கள் போராயுதங்கள் ஆவியின் வல்லமையே-2 அரண்களை நிர்மூலமாக்கும் தேவன் தரும் பெலனே-2 கிறிஸ்துவுக்குள் வாழ்வதனால் வெற்றி நிச்சயமே-2 எங்கும் எழுப்புதல் இந்தியா கிறிஸ்டியா-2-எங்கள் 1.தேவனுக்கெதிரான எல்லா மனித எண்ணங்களை-2 கிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள் கீழ்ப்படுத்தி ஜெயம் எடுப்போம்-2- கிறிஸ்துவுக்கு 2. கிறிஸ்துவின் திரு வசனம் ஆவியின் பட்டயம்-2 அனுதினம் அறிக்கை செய்து அலகையை துரத்திடுவோம்-2- கிறிஸ்துவுக்குள் 3. நற்செய்தி முழங்குவதே நமது மிதியடிகள்-2 ஆத்தும பாரத்தினால் அறிவிப்போம் சுவிசேஷம்-2- கிறிஸ்துவுக்குள் 4. சத்தியம் இடைக்கச்சை நீதி மார்க்கவசம்-2 இரட்சிப்பின் நிச்சயமே நிரந்தர தலைக்கவசம்-2-கிறிஸ்துவுக்குள் 5. விசுவாச வார்த்தைகள்தான் காக்கும் நம் கேடகம்-2 தீயவன் தீக்கணைகள் அவித்து ஜெயம் எடுப்போம்-2- கிறிஸ்துவுக்குள்