Song Profile

நேசிக்கிறேன் உம்மைத்தானே

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Nesikkiren Ummai Thaane

About

நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா நிலையில்லாத இந்த உலகத்திலே நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா உம்மைத்தானே இயேசையா 1. ஒவ்வொரு நாளும் எனது கண்முன் உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் வலப்பக்கத்தில் இருப்பதனால் – என் அசைக்கப்படுவதில்லை – நான் 2. உம்மை அல்லாமல் வேறே விருப்பம் உள்ளத்தில் இல்லையே நிம்மதியே நிரந்தரமே – என் நினைவெல்லாம் ஆள்பவரே 3. ஐயா உம் தாகம் எனது ஏக்கம் அடிமை நான் கதறுகிறேன் என் ஜனங்கள் அறியணுமே இரட்சகர் உம்மை தேடணுமே 4. உமது வேதம் எனது மகிழ்ச்சி ஓய்வின்றி தியானிக்கின்றேன் ஆற்றங்கரை மரமாக அயராமல் கனி கொடுப்பேன்