Song Profile

பாதுகாப்பார் நெருக்கடியில்

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Paadhukaappar Nerukadiyil

Other Names

Paadhukaappar

About

பாதுகாப்பார் நெருக்கடியில் பதில் தருவார் ஆபத்திலே துணையாய் வருவாய் உதவி செய்வார் கைவிடார் கைவிடார் 1. துதிபலி அனைத்தையும் பிரியமாய் ஏற்றுக்கொண்டார் – நம் – 2 நாம் செய்த நற்கிரியைகளை மறவாமல் நினைக்கின்றார் – 2 2. இதயம் விரும்புவதை நமக்கு தந்திடுவார் ஏக்கங்கள் அனைத்தையும் செய்து முடித்திடுவார் – நம் 3. மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம் வரும் எழுப்புதல் நாம் காண்போம் நம் தேவன் நாமத்தினால் கொடியேற்றி கொண்டாடுவோம் 4. இரதங்களை நம்பும் மனிதர் முறிந்து விழுந்தார்கள் கர்த்தரையே நம்பும் நான் நிமிர்ந்து நிற்கின்றேன் (இதே ராகத்தில் பின்வருமாறு நன்றி பாடல் பாடலாம்) பாதுகாத்தீர் நெருக்கடியில் பதில் தந்தீர் ஆபத்திலே துணையாய் வந்தீர் உதவி செய்தீர் நன்றி ஐயா நன்றி ஐயா 1. துதிபலி அனைத்தையும் பிரியமாய் ஏற்றுக்கொண்டீர் – 2 நான் செய்த நற்கிரியைகளை மறவாமல் நினைக்கிறேன் – 2 2. இதயம் விரும்பினதை எனக்கு தந்தீரே – 2 ஏக்கங்கள் எல்லாம் இதுவரை நிறைவேற்றினீர் – 2