Song Profile

யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பன்

Gersson Edinbaro

Tamil

Alternate Title

Yehovah Ruva

About

யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பன் தாழ்ச்சி எனக்கில்லையே யோகாவா தேவன் என் நல்ல ஆயன் குறைவொன்றும் எனக்கில்லையே ஆராதனை ஓ ஆராதனை ஓ ஆராதனை உமக்கே ஆராதனை ஓ ஆராதனை துதி ஆராதனை உமக்கே Verse 1 புல்லுள்ள இடங்களில் மேய்த்துச் சென்று என்னை போஷிக்கின்றீர் அமர்ந்த தண்ணீரண்டை என்னை நடத்தி தாகம் தீர்க்கின்றீர் உம் நாமத்தினிமித்தம் நீதியின் பாதையில் நாள்தோறும் நடத்துகின்றீர் Verse 2 எதிரிகள் முன்னே எனக்கொரு பந்தியை ஆயத்தப்படுத்துகிறீர் பாத்திரம் நிரம்பிட எண்ணையினாலே அபிஷேகம் செய்கின்றீர் வாழ்நாட்களெல்லாம் நன்மையும் கிருபையும் தொடர்ந்திடச் செய்திடுவீர் Verse 3 கதறின நேரம் என்னவென்று கேட்க வந்தீர் எனைக் காணும் எல்ரோயியே கூப்பிட்ட நேரம் உதவிட வந்தீர் எனைக் கேட்கும் எபிநேசரே தனிமையில் நடந்தேன் துணையாக வந்தீர் யேகோவா ஷம்மா நீரே