Song Profile

எந்தன் தாழ்வில் என்னை

Johnsam Joyson

Tamil

Alternate Title

Enthan Thaazvil Ennai

About

எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரை உந்தன் நாமம் உயர்த்திடுவேன் - 2 எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே நன்றியாலே துதித்திடுவேன் - 2 - எந்தன் தாழ்வில் கடந்த நாட்களில் கண்ணின் மணிபோல் கருத்துடன் நீர் காத்தீரே - 2 கடந்து வந்த பாதையில் தினமும் கரம் பிடித்தீர் அதிசயமாய் - 2 இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன் - 2 - எந்தன் தாழ்வில் கழுகை போல் உம் சிறகின் மேலே சுமந்து என்னை தாங்கினிரே - 2 வழிகளில் நான் இடறிவிடாமல் கருணை கரத்தால் உயர்த்தினிரே - 2 இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன் - 2 - எந்தன் தாழ்வில் உலகம் என்னை கைவிட்ட போது கிருபையாலென்னை தாங்கினிரே - 2 மனிதர் யாவரும் மறந்திட்ட போதும் மறவாமல் என்னை நினைத்தவரே - 2 இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன் - 2 - எந்தன் தாழ்வில்