Song Profile

ஆணி கொண்ட உன் காயங்களை

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Aani Konda Un Kayangalai

About

ஆணி கொண்ட உன் காயங்களை அன்புடன் முத்தி செய்கின்றேன் - 2 பாவத்தால் உம்மைக் கொன்றேனே - 2 ஆயனே என்னை மன்னியும் - 2 வலது கரத்தின் காயமே - 2 அழகு நிறைந்த இரத்தினமே அன்புடன் முத்தி செய்கின்றேன் இடது கரத்தின் காயமே - 2 கடவுளின் திரு அன்புருவே அன்புடன் முத்தி செய்கின்றேன் வலது பாதக் காயமே - 2 பலன் மிகத் தரும் நற்கனியே அன்புடன் முத்தி செய்கின்றேன் இடது பாதக் காயமே - 2 திடம் மிகத் தரும் தேனமுதே அன்புடன் முத்தி செய்கின்றேன் திருவிலாவின் காயமே - 2 அருள் சொரிந்திடும் ஆலயமே அன்புடன் முத்தி செய்கின்றேன்