Song Profile

அப்பா உங்க மடியில நான்

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Appa Unga Madiyila

About

அப்பா உங்க மடியில நான் தலைசாய்க்கணும் அப்பா உங்க நெனப்புலதான் உயிர்வாழணும் – 2 என் மனசை புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா – 2 – அப்பா உங்க என் உசுருக்குள்ள கலந்து உயிர்வாழ்வது ஏனோ உங்க உசுர கொடுத்து பாவி எனக்கு உயிர் தந்ததும் ஏனோ – 2 கண்ணுக்குள்ள பொத்தி வச்சி காத்துவந்தது ஏனோ கால்கள் இரண்டும் இடரிடாமல் சுமந்துவந்தது ஏனோ – என் – 2 – அப்பா உங்க உங்க உள்ளங்கையில் என்னை வரஞ்சி பார்த்துகிட்டதும் ஏனோ உங்க கைகள் இரண்டிலும் ஆணீ அடிக்க பொருத்துகிட்டதும் ஏனோ – 2 தூங்காம உறங்காம காத்துகொண்டது ஏனோ வழி எல்லாம் நிழல் போல தொடர்ந்துவந்ததும் ஏனோ – என்ன – 2 – அப்பா உங்க பாவி என் மேல நீங்க வச்ச பாசம் புரியல நேசர் உம்மை நேசிக்க இந்த பாவிக்கு தெரியல – 2 உதிரம் சிந்தி உசிர தந்த உண்மையான அன்பு ஒடஞ்சி நொருங்கி மண்டியிட்டேன் இயேசுவுக்கு முன்பு – நான் – 2 – அப்பா உங்க