Song Profile

ஆயிரக்கணக்கான வருடங்களாய்

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Ayirakanakkana Varudangalai

About

ஆயிரக்கணக்கான வருடங்களாய் – எம் ஆண்டவரே உம்மை எதிர்ப்பார்த்தோம் இஸ்ராயேல் ஜனங்களை ஆளவரும் – எம் இயேசு இரட்சகரே எழுந்தருளும் ஓசான்னா! தாவீதின் புதல்வா ஓசான்னா! ஓசான்னா! ஓசான்னா! மாமரி வயிற்றினில் பிறந்தவரே – மா முனிசூசை கரங்களில் வளர்ந்தவரே மானிடர் குலத்தினில் உதித்தவரே – எம் மன்னவரே எழுந்தருள்வீரே தாவீது அரசரின் புத்திரரே – ஓர் தெய்வீக முடியோடு வந்தவரே தருமர் எனப்புகழ் அடைந்தவரே – எம் தேவனே தேவனே வருவீரே. அற்புத யோர்தானில் தீட்சை பெற்றீர் – மா அருள் தபோதனரால் புகழப்பட்டீர் ஆகாயங்களை நீர் திறக்க விட்டீர் – உம் ஆதிபிதாவிடம் பதவி பெற்றீர்