Song Profile

எனக்காக இறைவா எனக்காக

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Enakkaga Iraiva Enakkaga

About

எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக 1. பழிகளை சுமத்தி பரிகசித்தார் - உயிர் பறித்திட எண்ணித் தீர்ப்பளித்தார் -எனக்காக இறைவா 2. தாளாச் சிலுவை சுமக்க வைத்தார் - உம்மை மாளாத் துயரால் துடிக்க வைத்தார் -எனக்காக இறைவா 3. விழுந்தீர் சிலுவைப் பளுவோடு - மீண்டும் எழுந்தீர் துயர்களின் நினைவோடு -எனக்காக இறைவா 4. தாங்கிட வொண்ணாத் துயருற்றே - உம்மைத் தாங்கிய அன்னை துயருற்றாள் -எனக்காக இறைவா 5. மறுத்திட முடியா நிலையாலே - சீமோன் வருத்தினார் தன்னை உம்மோடு -எனக்காக இறைவா 6. நிலையாய் பதிந்தது உம் வதனம் - அன்பின் விலையாய் மாதின் சிறு துணியில் -எனக்காக இறைவா 7. ஓய்ந்தீர் பளுவினைச் சுமந்ததனால் - அந்தோ சாய்ந்தீர் நிலத்தில் மறுமுறையும் -எனக்காக இறைவா 8. விழிநீர் பெருக்கிய மகளிருக்கு - அன்பு மொழிநீர் நல்கி வழி தொடர்ந்தீர் -எனக்காக இறைவா 9. மூன்றாம் முறையாய் நீர் விழுந்தீர் - கால் ஊன்றி நடந்திடும் நிலை தளர்ந்தீர் -எனக்காக இறைவா 10. உடைகள் களைந்திட உம்மைத் தந்தீர் - இரத்த மடைகள் திறந்திட மெய் நொந்தீர் -எனக்காக இறைவா 11. பொங்கிய உதரம் வடிந்திடவே - உம்மைத் தொங்கிடச் செய்தார் சிலுவையிலே -எனக்காக இறைவா 12. இன்னுயிர் அகன்றது உமை விட்டு - பூமி இருளில் ஆழ்ந்தது ஒளி கெட்டு -எனக்காக இறைவா 13. துயருற்றுத் துடித்தாள் உளம் நொந்து - அன்னை உயிரற்ற உடலின் மடிசுமந்து -எனக்காக இறைவா 14. ஒடுங்கிய உமதுடல் பொதியப்பட்டு - நீர் அடங்கிய கல்லறை உமதன்று -எனக்காக இறைவா