Song Profile

என்னை நேசிக்கின்றாயா

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Ennai Nesikkintraya

About

என்னை நேசிக்கின்றாயா - 2 கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா வானம் பூமி படைத்திருந்தும் வாடினேன் உன்னை இழந்ததினால் - 2 தேடி மீட்டிட பிதா அனுப்பினதால் ஓடி வந்தேன் மானிடனாய் பாவம் பாரா பரிசுத்தர் நான் பாவி உன்னை அழைக்கின்றேன் வா - 2 உன் பாவம் யாவும் சுமப்பேன் நான் பாதம் தன்னில் இளைப்பாற வா பாவத்தின் அகோரத்தை பார் பாதகத்தின் முடிவினைப் பார் பரிகாரச் சின்னமாய் சிலுவையிலே பலியானேன் பாவி உனக்காய் உம்மை நேசிக்கின்றேன் நான் - 2 கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும் நேசியாமல் இருப்பேனோ