Song Profile

மகிழ்வினை விதைத்திட

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Makilvinai vitaittiṭa

About

மகிழ்வினை விதைத்திட மனங்களை உயர்த்திட உறவினராய் வருவோம் மன்னவன் இயேசுவின் பொன்வழி நடந்திட அன்பினில் வாழ்ந்திடுவோம் இறை அன்பினில் வாழ்ந்திடுவோம் – மகிழ்வினை இதயங்கள் இணைக்கும் அன்புக்கு இணையாய் பூமியில் ஒன்றுமில்லை -- 2 இறைவழி வாழ்ந்திடும் முறை இது தெரிந்தால் பகைமையில் தொல்லை இல்லை – 2 பிரித்திடும் சுயநல வேர்களை அறுப்போம் புதுவழி படைத்திடுவோம் -- 2 நாம் இறைவழி வாழ்ந்திடுவோம் – மகிழ்வினை மனிதனின் உரிமைகள் மறுத்திடும் சமூகம் இறைவனின் குடும்பமில்லை – 2 எளியவர் வாழ்வுகள் அழிவது தொடர்ந்தால் இறைவனும் உயிர்ப்பதில்லை -- 2 அனைவரும் வாழ்ந்திட நம்மையே அளிப்போம் புதுவழி படைத்திடுவோம் -- 2 நாம் இறைவழி வாழ்ந்திடுவோம் – மகிழ்வினை