Song Profile

தமிழால் உன் புகழ் பாடி

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Thamizhaal un pugal

About

தமிழால் உன் புகழ் பாடி தேவா நான் தினம் வாழ வருவாயே திருநாயகா - வரம் தருவாயே உருவானவா எனை ஆழும் துன்பங்கள் கணையாக வரும்போது துணையாக எனையாள்பவா மனநோயில் நான் மூழ்கி மடிகின்ற பொழுதங்கு குணமாக்க வருவாயப்பா - எனை உனதாக்கி அருள்வாயப்பா உலகெல்லாம் இருளாகி உடனுள்ளோர் சென்றாலும் வழிகாட்டும் ஒளியானவா நீதானே எனக்கெல்லாம் நினைவெல்லாம் நீதானே நாதா உன் புகைழ் பாடுவேன் - எனை நாளெல்லாம் நீ ஆளுவாய்