நெஞ்சத்திலே தூய்மை யுண்டோ
இயேசு வருகின்றார்
நொருங்குண்ட நெஞ்சத்தயே
இயேசு அழைக்கின்றார்.
வருந்தி சுமக்கும் பாவம் - நம்மை
கொடிய இருளில் சேர்க்கும் - 2
செய்த பாவம் இனிபோதும் - 2
அவர் பாதம் வந்து சேரும் - 2
குருதி சிந்தும் நெஞ்சம் - நம்மை
கூர்ந்து நோக்கும் கண்கள் - 2
அங்கு பாரும் செந்நீர் வெள்ளம் - 2
அவர் பாதம் வந்து சேரும் - 2
மாய லோக வாழ்வு - உன்னில்
கோடி இன்பம் காடிடும் - 2
என்னில் வாரும் அன்பர் இயேசு - 2
உன்னில் வாழ இடம் வேண்டும் - 2