Song Profile

வரம் கேட்டு வருகின்றேன் இறைவா - என்

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Varam Kaettu Varugintren Iraiva

About

வரம் கேட்டு வருகின்றேன் இறைவா - என் குரல் கேட்டு அருளாயோ தலைவா பகை சூழும் இதயத்தின் சுவரை யெல்லாம் - என் பாசத்தால் தகர்க்கின்ற வரம் கேட்கின்றேன் புகை சூழ்ந்து இருள் வாழும் மனதில் எல்லாம் - உன் பெயர் சொல்லி ஒளியேற்ற உனைக் கேட்கின்றேன் நலமெல்லாம் எனக்கென்று தேடும் குணம் - இனி நாள்தோறும் இறக்கின்ற வரம் கேட்கின்றேன் பலியாகப் பிறர்க்கென்னை அளித்திட்ட பின் - என் பரிசாக உனைக் கேட்கும் வரம் கேட்கின்றேன்