Song Profile

இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Yesuvin Anbai Maranthiduvayo

About

இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ மறந்திடுவாயோ மனிதப் பண்பிருந்தால் இயேசுவின் அன்பை மறந்திடாதிருக்க நீ சிலுவையிலே அவர் -2 மரித்துத் தொங்கிடும் காட்சி மனதில் நில்லாதோ -இயேசுவின் அளவில்லா அன்பு அதிசய அன்பு ஆழமகலம் நீளம் எல்லை காணா அன்பு களங்கமில்லா அன்பு கருணை சேர் அன்பு -2 கல்வாரி மலை கண்ணீர் சொல்லிடும் அன்பு -இயேசுவின் அலைகடலை விட பரந்த பேரன்பு அன்னைமார் அன்பெல்லாம் திரையிடும் அன்பு மலைபோல் எழுந்தன்னை வளைத்திடும் அன்பு -2 சிலையென பிரமையில் நிறுத்திடும் அன்பு -இயேசுவின் எனக்காக மனுவுரு தரித்த நல் அன்பு எனக்காக தன்னையே உணவாக்கும் அன்பு எனக்காக பாடுகள் ஏற்ற பேரன்பு -2 எனக்காக உயிரையே தந்த தேவ அன்பு - இயேசுவின் கரைக்கடங்கா அன்பு கசிதரும் அன்பு கைதி போல் இயேசுவே சிறையிடும் அன்பு விலையில்லாப் பலியாக விளங்கிடும் அன்பு -2 விவரிக்க விவரிக்க விரிந்திடும் அன்பு -இயேசுவின்