Song Profile

மன்னியும் இயேசுவே எந்தன் பாவங்களை

Tamil

Alternate Title

Manniyum Yesuvae Endhan

Other Names

Manniyum Yesuvae Endhan lyrics

About

மன்னியும் இயேசுவே எந்தன் பாவங்களை மன்னியும் நேசரே எந்தன் மீறுதலை மன்னியும் இயேசுவே மன்னியும் என் நேசரே 1. அறியாமல் நான் செய்த பாவங்கள் மன்னியும் புரிந்த மீறுதல் நீக்கிவிடும் – (2) உடலால் உள்ளத்தாலே – என் வாழ்நாளில் செய்த பாவங்கள்.. மலைபோல் வந்து நிற்குதே-உம் இரத்தத்தால் கழுவுமய்யா… 2. உளையான சேற்றினில் மூழ்கிக்கிடந்தேன் களைகளை வாழ்வினில் பெருகச்செய்தேன் -2 கனிகொடா மரம் போல் – நான் வளர்ந்து நின்றேனய்யா விளையாத பாழ்நிலம் போல்-உம்முன் வெறுமையாய் நின்றேனய்யா 3. ஈசோப்பினாலே என்னைக் கழுவும் உறைந்த மழையிலும் வெண்மையாவேன் -2 அக்கிரமம் நீக்கி என்னில் – சுத்த இருதயம் சிருஷ்டித்திடும் உம் கோபம் ஒரு நிமிஷம் – நித்ய கிருபையாய் மனமிரங்கும் 4. உம் சமுகம் விட்டு என்னைத் தள்ளாதேயும் தூய ஆவியை நீக்காதிரும் – 2 இரட்சண்ய சந்தோஷத்தை – என்னில் திரும்பத் தாருமய்யா உற்சாக ஆவி நித்தம் – என்னைத் தாங்கச் செய்யுமய்யா

Lyrics

Manniyum Yesuvae Endhan PaavangaLai Manniyum Nesarae Endhan Meeruthalai Manniyum Yesuvae Manniyum En Nesarae 1. ARiyamal Naan Seitha PaavangaL Manniyum Purintha MeeRudhal Neekividum – (2) Udalaal ULLathaalae – En VaazhnaaLil Seidha PaavangaL… Malaipol Vandhu NiRkudhae- Um Irathatthaal Kazhuvumaiyaa… 2. ULaiyaana SaetRinil Moozhgi Kidanthaen KaLaikaLai Vaazhvinil Peruga Cheithaen -2 Kanikodaa Maram Pol – Naan VaLarndhu Nintraenaiyaa ViLaiyaatha Paazh Nilam Pol – Um Mun Verumaiyaai Nintraenaiyaa 3. Eesoppinaalae Ennai Kazhuvum URaintha Mazhayilum VeNmayaavaen -2 Ackiramam Neekki Ennil – Suttha Irudhayam Sirushtithidum Um Kobam Oru Nimisham – Nithya Kirubaiyaai Manamirangum 4. Um Samugam Vittu Ennai ThaLLadhaeyum Thooya Aaviyai Neeckaathirum – 2 IratchaNya Santhosatthai – Ennil Thirumba Thaarumaiya URchaaga Aavi Nittham – Ennai Thaanga Cheiyumaiyaa