Song Profile

தம் கிருபை பெரிதல்லோ

Tamil

Alternate Title

Tham Kirubai Perithallo

About

தம் கிருபை பெரிதல்லோ எம் ஜீவனிலும் அதே இம்மட்டும் காத்ததுவே இன்னும் தேவை, கிருபை தாருமே 1. தாழ்மை உள்ளவரிடம் தங்கிடுதே கிருபை வாழ்நாள் எல்லாம் அது போதுமே சுகமுடன் தம் பெலமுடன் சேவை செய்யக் கிருபை தாருமே – தம் கிருபை 2. நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை நீசன் என் பாவம் நீங்கினதே நித்திய ஜீவன் பெற்று கொண்டேன் காத்துக் கொள்ள கிருபை தாருமே – தம் கிருபை 3. தினம் அதிகாலையில் தேடும் புதுக்கிருபை மனம் தளர்ந்த நேரத்திலும் பெலவீன சரீரத்திலும் போதுமே உம் கிருபை தாருமே – தம் கிருபை 4. மா பரிசுத்த ஸ்தலம் கண்டடைவேன் கிருபை மூடும் திரை கிழிந்திடவே தைரியமாய்ச் சகாயம் பெற தேடி வந்தேன் கிருபை தாருமே – தம் கிருபை 5. ஒன்றை ஒன்று சந்திக்கும் சத்தியம் உம் கிருபை என்றும் மறவேன் வாக்குத்தத்தம் நீதியுமே சமாதானமுமே நிலை நிற்கும் கிருபை தாருமே – தம் கிருபை 6. ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை ஆத்தும பாரம் கண்ணீரோடே சோர்வின்றி நானும் வேண்டிடவே ஜெப வரம் கிருபை தாருமே – தம் கிருபை 7. கர்த்தர் வெளிப்படும் நாள் அளித்திடும் கிருபை காத்திருந்தே அடைந்திடவே இயேசுவே உம்மைச் சந்திக்கவே இரக்கமாய்க் கிருபை தாருமே – தம் கிருபை

Lyrics

Tham kirubai peridhalloa Em jeevanilum adhae Immattum kaaththadhuvae Innum thaevai, kirubai thaarumae 1. Thaazhmai ullavaridam thangidudhae kirubai Vaazhnaal ellaam adhu poadhumae Sugamudan tham belamudan Saevai seiyya kirubai thaarumae – Tham kirubai 2. Nirmoolamaagaadhadhum nirpadhumoa kirubai Neesan en paavam neenginadhae Niththiya jeevan petru kondaen kaaththu kolla kirubai thaarumae – Tham kirubai 3. Dhinam adhikaalaiyil thaedum pudhukirubai Manam thalarndha naeraththilum Belaveena sareeraththilum Poadhumae um kirubai thaarumae – Tham kirubai 4. Maa parisuththa sthalam kandadaivaen kirubai Moodum thirai kizhindhidavae Dhairiyamaai sagaayam pera Thaedi vandhaen kirubai thaarumae – Tham kirubai 5. Ondrai ondru sandhikkum saththiyam um kirubai Endrum maravaen vaakkuththaththam Needhiyumae samaadhaanamumae Nilai nirkum kirubai thaarumae – Tham kirubai 6. Sthoaththira jebaththinaal perugudhae kirubai Aathuma baaram kanneeroadae Soarvindri naanum vaendidavae Jeba varam kirubai thaarumae – Tham kirubai 7. Karththar velippadum naal aliththidum kirubai Kaathirundhae adaindhidavae Yaesuvae ummai sandhikkavae Irakkamaai kirubai thaarumae – Tham kirubai