Song Profile

விண்ணின் ஒளியே கண்ணின் மணியாய்

Tamil

Alternate Title

Vinni Oliye Kannin Maniyay

About

விண்ணின் ஒளியே கண்ணின் மணியாய் மண்ணில் வந்து உதித்தார் மண்ணில் மாளும் மாந்தரை மீட்கும் கோதுமை மணியாய் பிறந்தார் Happy Christmas, Merry Christmas Happy Happy Christmas, Wish you, Merry Merry Christmas 1. விண்மீன் ஜொலிக்க மேய்ப்பர் கண்டு இயேசு பிறந்ததை அறிந்தார் நமக்குள் இயேசு பிறந்ததை அறிய சாட்சியாய் வாழ்ந்து ஜொலிப்போம் (Happy …) 2. பாவ உலகை பரிசுத்தமாக்க பரமன் இயேசு பிறந்தார் பாவி நீயும் தேடி வந்தால் பரலோகை அறிய செய்வார் (Happy …) 3. பழையதை கழித்து புதியன தரவே புதுமைப்பாலகன் பிறந்தார் புண்ணியரை அறிவிக்கும் புதிய மனிதராய் புத்தாண்டுக்குள் செல்வோம் (Happy …) 4. ஏழையை மீட்கும் ஏவலனாக மாட்டுக்குடிலில் பிறந்தார் ஏழையின் சிரிப்பில் இயேசுவை காண சிறந்ததை நாமும் கொடுப்போம் (Happy …)