Song Profile

இயேசு பாலனாய் பிறந்தார்

Tamil

Alternate Title

Yesu Balanai Piranthar

About

இயேசு பாலனாய் பிறந்தார் இயேசு தேவனே பெத்லகேமிலே ஏழைக் கோலமாய் முன்னணை புல்லணை மீதிலே பிறந்தார் 1. உன்னதத்தில் தேவ மகிமை பூமியிலே சமாதானமும் மானிடரில் பிரியம் உண்டாவதாக என்று தேவ தூதர் பாடிட – இயேசு 2. விண்ணை வெறுத்த இம்மானுவேல் விந்தை மானிடவதாரமாய்த் தன்னைப் பலியாகத் தந்த ஒளி இவர் தம்மை பணிந்திடுவோம் வாரும் – இயேசு 3. ஓடி அலைந்திடும் பாவியைத் தேடி அழைக்கும் இப்பாலகன் பாவங்களின் நாசர் பாவிகளின் நேசர் பாதம் பணிந்திடுவோம் வாரும் – இயேசு 4. கைகள் கட்டின தேவாலயம் கர்த்தர் தங்கும் இடமாகுமோ நம் இதயமதில் இயேசு பிறந்திட நம்மை அளித்திடுவோம் வாரும் – இயேசு 5. அன்பின் சொரூபி இப்பாலனே அண்டி வருவோரின் தஞ்சமே ஆறுதல் அளித்து அல்லல் அகற்றிடும் ஆண்டவரை பணிவோம் வாரும் – இயேசு