Song Profile

இயேசு மானிடனாய் பிறந்தார்

Tamil

Alternate Title

Yesu Manidarai Pirandhar

About

இயேசு மானிடனாய் பிறந்தார் இந்த லோகத்தை மீட்டிடவே இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார் இந்த நற்செய்தி சாற்றிடுவோம் 1. மேய்ப்பர்கள் ராவினிலே – தங்கள் மந்தையைக் காத்திருக்க தூதர்கள் வானத்திலே தோன்றி தேவனைத் துதித்தனரே – இயேசு 2. ஆலோசனைக் கர்த்தரே இவர் அற்புதமானவரே விண் சமாதான பிரபு சர்வ வல்லவர் பிறந்தனரே – இயேசு 3. மாட்டுத் தொழுவத்திலே – பரன் முன்னணையில் பிறந்தார் தாழ்மையைப் பின்பற்றுவோம் அவர் ஏழ்மையின் பாதையிலே – இயேசு 4. பொன்பொருள் தூபவர்க்கம் வெள்ளைப் போளமும் காணிக்கையே சாட்சியாய் கொண்டு சென்றே வான சாஸ்திரிகள் பணிந்தனரே – இயேசு 5. அன்னாளும் ஆலயத்தில் அன்று ஆண்டவரை அறிந்தே தீர்க்கதரிசனமே கூறி தூயனைப் புகழ்ந்தனரே – இயேசு 6. யாக்கோபில் ஓர் நட்சத்ரம் இவர் வாக்கு மாறாதவரே கண்ணிமை நேரத்திலே நம்மை விண்ணதில் சேர்த்திடுவார் – இயேசு